இவைகளெல்லாம் தமிழ்நாட்டில் தான் அதிகம் சாத்தியம்...

on Jun 21,2013
By
தமிழ் நகைச்சுவை
தமிழ் நகைச்சுவை

1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையாஇருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால்தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

13) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

14) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்சதகுதி TV Channel ஆரம்பிப்பது.

15) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

16) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

17) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும்பணத்திற்காக சிசேரியன் செய்வது.

18) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

19) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும்தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

20) Ambulance உம் , காவல் துறையும்அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

21) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

22) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

23)இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது.

24) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

25)மின்சாரம் தட்டுப் பாட்டிலும் ACபேருந்து நிலையம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மைஉண்டு.

26)வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது.தெற்கேபடிப்பவனுக்கு நேதாஜி முதல் அனைவரையும் தெரியும்.

27)சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டைபோடறதுக்கு மட்டும்.அதுக்குகூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு..

Previous Joke Random Joke 411 Next Joke

Comments(0)

No Comments Found… Be the first person to comment here…
Login into your Account to comment here…
▲ Back to Top